Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Friday, March 29, 2024 · 699,637,557 Articles · 3+ Million Readers

பிரான்ஸ் மண்ணில் வெற்றிவாகை பெற இருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி !!

PARIS, FRANCE, December 14, 2019 /EINPresswire.com/ --

CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி, கிழக்கு துர்கிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றிவாகை பெறும் நம்பிக்கையோடு தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

சனிக்கிழமை (14 – 12 – 2019) பிரான்சில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி வெற்றிகொள்ளும் பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு தேர்வாவதோடு, வெற்றிக்கிண்ணத்துக்கான இறுதியாட்டம் மசிடோனியா நாட்டில் இடம்பெற இருக்கின்றது.

தற்போது பிரான்சில் நிலைகொண்டுள்ள தமிழீழ உதைபந்தாட்ட அணி, தேர்வுச்சுற்றுக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், உதைபந்தாட்ட இரசிகர்கள், சமூக-அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் அணிக்கு தோழமையினை தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, இத்தாலி என புலம்பெயர் தேசங்களில் இருந்து இளையோர்களதமிழர் தேசத்தை பிரதிபலித்து , தமிழீழ உதைபந்தாட்ட அணியாக ஒருங்கிணைந்துள்ளனர்.

2013ம் ஆண்டு தோற்றம் பெற்ற CONIFA Confederation of Independent Football அமைப்பானது அரசுகளற்ற இனங்களுக்கு, உலக சிறுபான்மை தேசிய இனக்குழுமங்களுக்கும் என உலக எல்லைகளைக் கடந்த வகையில் ஆடுகளத்தினை உருவாக்கி அனைத்துலக கிண்ணத்துக்கான போட்டிகளை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது



Suthan Raj
TGTE
+33 755 - 16 - 8341
email us here

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release